தூதுவளை ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்?

by Editor News

பருவநிலை மாற்றத்தால் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, இருமல் வருகிறது. இதுபோன்ற சமயத்தில் பாரம்பரிய நாட்டு மருத்துவ முறைகளை உணவின் வழியாக கொடுக்கும்போது பக்கவிளைவுகளின்றி பிரச்னைகளை தவிர்க்கலாம்.

தூதுவளை ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை. இது சளி, இருமல், நெஞ்சு சளி, மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனைகள் மற்றும் பல சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்தது. அதற்கு தூதுவளையின் இலையை துவையல், சூப் மற்றும் ரசம் என்று செய்து சாப்பிடலாம். அதிலும் தூதுவளை ரசத்தை சூப்பாக கூட சாப்பிடலாம். சளி ,இருமல் இல்லை என்றாலும் இந்த தூதுவளை ரசம் வைத்து சாப்பிடுவது நல்லதாகும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தூதுவளை கீரை – 1கப்

பூண்டு – 6 பல்

சின்ன வெங்காயம் – 6

புளி – எலுமிச்சை அளவு

காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயத்தூள் – 1/2 tsp

கடுகு – 1/2 tsp

தக்காளி – 3

மஞ்சள் தூள் – 1/4 tsp

மிளகு – 1tbsp

சீரகம் – 1 tbsp

நெய் – 2 tsp

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

தூதுவளையை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு கடாய் வைத்து நெய் விடுங்கள். காய்ந்ததும் தூதுவளை கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பாத்திரம் வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலந்துவிடுங்கள்.

அதோட் மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.

பின் தூதுவளையை மிக்ஸியில் அரைத்து சேருங்கள். இறுதியாக உப்பு சேருங்கள். இதை நன்றாக கொதித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் தாளிக்க கடாய் வைத்து நெய் ஊற்றி கடுகு, சீரகம் காய்ந்த மிளகாய் , பெருங்காயத்தூள் சேர்த்து பின் அதை அந்தக் கலவையில் கொட்டுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

Related Posts

Leave a Comment