183
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரகசியங்களை கசியவிட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்த தகவலை ட்ரூடோ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தூதரக உறவுகளை சீர்குலைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர்.
கலந்துரையாடப்பட்ட அனைத்து விடயங்களும் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அது பொருத்தமானதல்ல என்றும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடத்தக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திறந்த மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகளை விரும்புவதாக கூறினார்.