இந்த ஆசனம் இந்துதலாசனம் அல்லது நின்ற பிறை ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் உடலின் பக்கவாட்டு, தோள்கள் மற்றும் மேல்கைகளுக்கு சிறந்த நீட்சி அளிக்கிறது. அதிகாலையில் இதை செய்வது உங்களை மலச்சிக்கலிலிருந்து நிவாரணமளிக்க உதவும்.
செய்முறை :
விரிப்பில் நின்று கொண்டு கால்களை ஓன்றாக சேர்த்து வைத்து நேராக நில்லுங்கள். மூச்சை உள்ளிழிக்கும் போது மெதுவாக உங்கள் கைகளை உயர்த்தி உள்ளங்கைகளை ஒனறாக இணையுங்கள். மூச்சை உள்ளிழிக்கும் போது உங்கள் இடது புறம் வளைந்து ஒரு பிறை சந்திரன் வடிவை உங்கள் உடலுடன் உண்டாக்குங்கள். உங்கள் இடுப்பை மட்டும் வளைத்து கால்கள் வளையாமல் நேராக நின்று கொள்ளுங்கள்.
மெதுவான 10-10 மூச்சுகளுக்கு அங்கேயே இருங்கள். மூச்சை உள்ளிழுக்கும் போது, மெதுவாக உங்கள் உடலை மேலே கொண்டு வந்து மூச்சை விட்டு பின் மெதுவாக உங்கள் வலது புறமாக வளையுங்கள். அங்கேயே 8-10 மெதுவான ஆழமான மூச்சுகள் வரை இருங்கள்.
திரும்ப மேலே வந்து மெதுவாக கைகளை கீழே விடுங்கள். இது ஒரு சுற்றை நிறைவடைய செய்யும். இந்த ஆசனத்தை 6-7 முறைகள் உங்கள் மூச்சின் மேல் கவனம் செலுத்தி செய்ய வேண்டும். இடுப்பு, தோள் அல்லது முதுகு காயம் இருந்தால் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பயன்கள் :
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்று பகுதியில் இருக்கும் அதிகப்படியாக சதை குறையும். தோள்பட்டைகள், கைகளுக்கு வலிமை தரும் ஆசனம் இது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.