வேல்ஸில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட மக்கள், உக்ரைனிய அகதிகளை தங்க வைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக வேல்ஸ் செயலாளர் சைமன் ஹார்ட் தெரிவித்துள்ளார்.
வியாழன் நிலவரப்படி, உக்ரைனுக்கான வீடுகள் திட்டத்தில் 10,236பேர் தங்கள் ஆர்வத்தைப் பதிவுசெய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
பிரித்தானியாவில் 147,500 பேர் இந்தத் திட்டத்தில் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்துள்ளதாக ஹார்ட் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் குடும்பம் இல்லாத உக்ரைனியர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் விசாவைப் பெற இது உதவுகிறது.
அத்துடன், உக்ரைனிய அகதிகள் ஆறு மாதங்களுக்கு டிரான்ஸ்போர்ட் ஃபார் வேல்ஸ் சேவைகளில் பயணம் செய்யலாம் என்று வேல்ஸ் முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் உக்ரைனில் போரிலிருந்து தப்பியோடி வரும் ஒருவருக்கு மாதத்திற்கு 350 பவுண்டுகள் வழங்குவதாக அறிவித்துள்ளது.