தேநீர் எத்தனை வகை உண்டு, அதன் மூலமாக உடலுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்தச் செய்தி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தியர்களின் இதயத்தில் தேநீர் குடி கொண்டிருக்கிறது. காலைப் பொழுது பெரும்பாலானவர்களுக்கு தேநீர் இன்றி விடியாது. சிலருக்கு தேநீரே உணவாக இருக்கிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடித்தமானதாக தேநீர் இருக்கிறது. குறிப்பாக, நீங்கள் வாங்கிக் கொடுக்க முன்வந்தால் எல்லோரும் தயங்காமல் ஏற்றுக் கொள்ளும் விஷயம் தேநீர் தான்.
ஒரு கப் டீ குடித்தால் நம் மனதுக்கும், உடலுக்கும் அது புத்துணர்ச்சி கொடுக்கும். குறிப்பாக, பனி சூழ்ந்த காலப் பொழுதிலும், மழை தூறிக் கொண்டிருக்கும் சமயத்திலும் நல்ல சூட்டில், கம, கமவென ஒரே ஒரு கப் டீ அருந்தினால், அதைவிடவும் அமிர்தம் வேறெதுவும் இருக்க முடியாது.
நம்மில் பெரும்பாலானவர்கள் பால் சேர்த்து தயார் செய்யப்படும் டீ தான் சாப்பிடுகிறோம். வெகு சிலரே மற்ற வகை தேநீரை தேர்வு செய்வார்கள். தேநீர் எத்தனை வகை உண்டு, அதன் மூலமாக உடலுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்தச் செய்தி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
கிரீன் டீ :
ஒட்டுமொத்த உடல் நலன் குறித்தும் நீங்கள் அக்கறை கொள்பவராக இருந்தால், அதற்கான சிறந்த தீர்வாக இந்த டீ இருக்கும். கிரீன் டீ தயார் செய்வது என்பது நேர்த்தியான வேலை தான். இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் ஏற்படாமல் பாதுகாக்கிறது. கிரீன் டீ அருந்துவதால் சில வகை புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிரீன் டீ குடித்தால் இன்ஸ்டன்ட் புத்துணர்ச்சி ஏற்படும்.
பிளாக் டீ :
பிளாக் டீயில் மிக அதிகப்படியான காஃபைன் இருக்கிறது. இது பிளாக் காஃபிக்கு சரியான மாற்றாக உள்ளது. நீரிழிவு, இதய நோய்கள் போன்ற நீண்ட கால நோய்களுக்கு தீர்வு காணும் விதமாக பிளாக் டீ இருக்கிறது. ஒரு நாளின் தொடக்கத்தில் அல்லது பாதியில் உங்களுக்கு உந்து சக்தி கொடுப்பதாக இது அமைகிறது. பிளாக் டீ தேநீர் குடிப்பதன் நன்மைகளோடு, குறைவான கலோரி கொண்ட புத்துணர்ச்சி பானம் ஆகும்.
துளசி டீ :
ஒரு கப் துளசி டீ-யில் நேர்மறையான பல பலன்கள் இருக்கின்றன. குறிப்பாக, உடலுக்கு அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை இது கொடுக்கிறது. குறிப்பாக உங்களுக்கு சளி பிடித்துள்ளது அல்லது தொண்டை கரகரப்பாக உள்ளது என்றால் துளசி டீ மிகுந்த பலன் கொடுக்கும்.
பால் சேர்த்த தேநீர் :
நம் உடல் அதிகம் குடித்து பழகிய தேநீர். வாழ்நாளில் இதை எத்தனை முறை குடித்திருப்பீர்கள் என்று எண்ணி சொல்லிவிட முடியாது. நம் எண்ணங்களை தூண்டும் சக்தி இதற்கு இருக்கிறது. எப்போதெல்லாம் மனமும், உடலும் சோர்வாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் இதை நீங்கள் அருந்தினால், உடனடியாக ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். கூடுதல் சுவை மற்றும் ஆரோக்கியத்து இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.