உக்ரைனை வீழ்த்தி ரஷ்யாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது – ஜோ பைடன்
நேட்டோ படைகளுடன் ரஷ்யா நேரடியாக மோதினால், மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், உக்ரைனில் இருந்து கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா போரிடாது என்றும், நேட்டோ படைகள் மற்றும் ரஷ்யா இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் எனவும் கூறினார். ஒருவேளை உக்ரைனில் உயிரி ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தி இருந்தால், அதற்கு உரிய விலையை ரஷ்யா கொடுத்தாக வேண்டும் என்றும் பைடன் எச்சரித்தார்.
உக்ரைனை வீழ்த்தி ரஷ்யாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கடல் உணவுகள், வோட்கா, வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களுக்கான இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதிப்பதாக பைடன் தெரிவித்தார்.