வாழைப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் நிறைந்திருப்பதால், முடியின் ஈரப்பதம் குறையாமல் இருக்க வழி செய்கிறது.
முடி உதிர்வு பிரச்சனை என்பது இன்றைய கால கட்டத்தில் இளம் வயதில் இருந்தே தொடங்கி விடுகிறது. இதற்காக பல வகையான வைத்திய முறைகளை செய்து வருவோம். முடி உதிர்வு, பொடுகு தொல்லை, பேன் தொல்லை, வெள்ளை முடி, முடி வெடிப்பு, முடியில் ஆரோக்கியமான வளர்ச்சி இன்மை போன்ற முக்கிய பிரச்சனைகள் உள்ளது. இவற்றில் அதிகப்படியான பேருக்கு முடி உதிர்வு சார்ந்த பாதிப்பு தான் உள்ளது. இதை எளிய முறையில் சரிசெய்ய சில வீட்டு குறிப்புகள் உதவும். இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம், தேன் மற்றும் தயிர் பேக் :
வாழைப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் நிறைந்திருப்பதால், முடியின் ஈரப்பதம் குறையாமல் இருக்க வழி செய்கிறது. வாழைப்பழம் முடி ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது. அதே போன்று தயிரில் அதிக அளவு லாக்டிக் அமிலம் உள்ளது; இது சேதமடைந்த முடியை குணப்படுத்துகிறது. தேனில் பல மருத்துவ பண்புகள் உள்ளது. எனவே இது முடியின் ஈரப்பதத்திற்கும் உதவுகிறது. முடி உதிர்வுக்கு இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போன்று ஆக்கிக்கொண்டு வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி வரலாம்.
தேங்காய் எண்ணெய், தேன், மற்றும் அவகேடோ :
அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் குவாக்காமோல் மூலப்பொருட்கள் உள்ளன. இவை முடியின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. முடி பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும், ஊட்டமாகவும் இருக்க இது உதவுகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் தேனானது முடியில் ஈரப்பதத்தை தக்க வைக்க வழி செய்கிறது. 1 அவகேடோ பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் பேஸ்ட் போன்று கலந்து, தலையில் தடவி கொள்ளுங்கள். பிறகு 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்தால், சிறந்த பலனைக் பெறலாம்.
நாட்டு சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய் :
தலையில் உள்ள இறந்த செல்களை நீக்க நாட்டு சர்க்கரை உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் இயற்கையான முறையில் உங்கள் முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது. எனவே இவை இரண்டின் கலவையும் உங்கள் தலைமுடிக்கு பல நன்மைகளை செய்ய கூடியவை. சிறிது ஆலிவ் எண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரையை எடுத்து கொண்டு நன்றாக கலந்து தலைக்கு தடவுங்கள். இந்த ஹேர் பேக் பொடுகு மற்றும் வறண்ட முடியை சீராக வைக்கிறது.
முட்டை, பால், தேங்காய் எண்ணெய் :
முடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை பெரிதும் உதவுகிறது. முட்டையில் வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற முக்கிய ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அதே போன்று பால் மற்றும் தேங்காய் எண்ணெய் முடிக்கு ஊட்டச்சத்தையும் ஈரப்பதத்தையும் அளிக்க கூடிய காரணிகள் இருக்கிறது. எனவே இவற்றை ஒன்றாக கலந்து தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்தல் மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சனைக்கு தீர்வை தரும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தடவினால் சிறந்த பலனை பெறலாம்.