195
பிரித்தானியாவை அடைய முயற்சிக்கும் உக்ரைனிய அகதிகள் அதிகாரத்துவ தடைகளை எதிர்கொள்ளக்கூடாது என்று லண்டனுக்கான உக்ரைன் தூதர் வாடிம் பிரிஸ்டைகோ வலியுறுத்தியுள்ளார்.
சோதனைகளின் அவசியத்தை ஒப்புக்கொண்ட அவர், ஆனால் பெரும்பாலான அகதிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார்.
லண்டனில் உள்ள உக்ரைன் தூதரகம், மக்கள் நாட்டிற்கு வந்தவுடன் சோதனை பணிகளை முடிக்க அரசாங்கத்திற்கு உதவ முடியும் என்றும் அவர் கூறினார்.
குண்டுவெடிப்பின் கீழ் தப்பிச் செல்லும் பலரிடம் கடவுச்சீட்டு போன்ற தேவையான ஆவணங்கள் கிடைக்காததால், காகிதப்பணி சிக்கல்கள் பின்னர் தீர்க்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள்காட்டி, அகதிகளுக்கான அனைத்து விசா விதிகளையும் நீக்குவதற்கான அழைப்புகளை பிரித்தானிய அரசாங்கம் எதிர்த்துள்ளது.