சினிமாவில் நாம் பார்க்கும் பிரபலங்கள் அனைவருமே நிஜ வாழ்க்கையில் பெரிய அளவில் இருப்பார்கள் என்ற நினைப்பு மக்களிடம் உள்ளது. ஆனால் அது உண்மை கிடையாது, பலரும் கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள்.
குக்கூ பட நடிகரின் அவல நிலை:
2014ம் ஆண்டு ராஜு முருகன் இயக்க அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் குக்கூ. இதில் தினேஷ் கதாபாத்திரத்தை அடுத்து அவரது நண்பனாக நடித்த இளங்கோவன் வேடம் அதிகம் பாராட்டப்பட்டது.
வெற்றிப்பெற்ற படத்தில் நடித்திருநதாலும் இளங்கோவன் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இளங்கோவின் சோக கதை:
எனது சொந்த ஊர் தஞ்சாவூர், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டைவிட்டு வெளியேற 2019ம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டேன். வாடகை வீடு எடுத்து தங்கி பாட்டு பாடி அதில் வரும் பணத்தில் வாழ்ந்து வந்தேன். பின் குக்கூ படத்தில் வாய்ப்பு கிடைக்க நடித்தேன், அதன்பிறகு எந்த வாய்ப்பும் வரவில்லை.
இந்த கொரோனா நேரத்தில் வெளியே கூட செல்ல முடியாத சூழலில் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் வெளியே தள்ளப்பட்டேன். பின் வேறு வழியில்லாமல் பிளாட்பாரத்தில் தங்கினேன்.
இங்கு பாடல்கள் பாடி பிச்சை எடுத்து வருகிறேன், சுரங்கப்பாதையில் தங்கி இருக்கிறேன் என கூறியுள்ளார். அவர் எமோஷ்னலாக கொடுத்த பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.