5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ரூ. 10 முதல் 15 வரை உயர்த்தப்படக் கூடும் என்ற கருத்து பரவியது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை எண்ணவாக உள்ளது?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியாவில் 124வது நாளாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இல்லை.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. பெட்ரோல் விலை ரூ.110 வரை உயரந்ததோடு டீசல் விலையும் ரூ.100ஐ நெருங்கியது.
மத்திய அரசு பெட்ரோல் – டீசல் மீதான வரியை குறைத்ததையடுத்து அவற்றின் விலை சற்று குறைந்தது. அதன்படி இந்தியாவில் கடந்த 123 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது. கச்சா எண்ணெய்யை பொறுத்தவரை, இந்தியாவின் குறைந்தபட்ச தேவை என்பது நாள் ஒன்றிற்கு 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த உயர்வு இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையில் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்வு இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் 124வது நாளாக இன்று பெட்ரோல் -டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் தொடர்கிறது.