மோரில் லாக்டோ ஆசிட் அதிகம் இருப்பதோடு நல்ல பாக்டீரியாக்களையும் அதிகம் கொண்டுள்ளது. இதனால் அது தீவிரமாக சருமத்தின் உள்ளே சென்று பளபளக்கும் மாற்றத்தை தருகிறது.
தயிரிலிருந்து தயாரிப்பதுதான் மோர் (Buttermilk ) என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அது வெறும் சாதாரண மோர் அல்ல. எண்ணற்ற நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது என்பதும் தெரியுமா..? அதோடு அது உடலுக்கு குளுர்ச்சி தருவது மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. எப்படி என்று பார்க்கலாம்.
மோரில் லாக்டோ ஆசிட் அதிகம் இருப்பதோடு நல்ல பாக்டீரியாக்களையும் அதிகம் கொண்டுள்ளது. இதனால் அது தீவிரமாக சருமத்தின் உள்ளே சென்று பளபளக்கும் மாற்றத்தை தருகிறது. குறிப்பாக சரும்த்தின் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. கரும்புள்ளிகளை அகற்றுகிறது. சமச்சீரான சரும நிறத்தை அளிக்கிறது. எனவே மோர் பயன்படுத்தி மாஸ்க் அப்ளை செய்ய சில குறிப்புகள் உங்களுக்காக…
கொண்டை கடலை மாவு மற்றும் மோர் :
இதை உப்டான் ஃபேஸ் மாஸ்க் என்றும் அழைப்பார்கள். கொண்டைக் கடலையை பொடியாக்கி அதில் மோர் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். அல்லது மோரில் கொண்டைக் கடலையை ஊற வைத்து மறுநாள் காலை மைய அரைத்து அப்ளை செய்யலாம். இதில் சிட்டிகை மஞ்சளும் சேர்க்கலாம். இந்த மாஸ்க் அப்ளை செய்வதால் டல்லாக இருக்கும் உங்கள் சருமத்திற்கு உடனடி குளோ கிடைக்கும். அனைத்து வகையான சருத்திற்கும் ஏற்றது.
மோர் டோனர் :
மோரில் கூட நல்ல டோனரை பெற முடியும் என்பது தெரியுமா..? ஆம் அது இயற்கையானது என்பதால் சருமத்தின் துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது. எனவே 2 ஸ்பூன் மோர் எனில் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்துகொள்ளுங்கள். அதோடு ஒரு சொட்டு டி ட்ரீ ஆயில் கலக்குங்கள். இதை நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து முகத்தில் மசாஜ் செய்து கழுவ முகம் தெளிவாகி பளிச்சிடும்.
மோர் மற்றும் தக்காளி :
1 ஸ்பூன் மோர், 1 ஸ்பூன் தக்காளி சாரு எடுத்து நன்கு கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் அப்ளை செய்துகொள்ளுங்கள் 30 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் குளுர்ச்சியாக இருக்கும். சுட்டெரிக்கும் வெயிலில் சென்று வந்தபின் இந்த குறிப்பை செய்ய சருமம் எரிச்சல் அடங்கி இதமாக இருக்கும்.