என்னதான் ஸ்மார்ட்போன்களை நிறைய விலை கொடுத்து வாங்கினாலும்., அதை பயன்படுத்த இண்டர்நெட் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவும், தனியார் நெட்வொர்குகளை பயன்படுத்தும் அனைவரும் அதிக விலை கொடுத்து மாதாந்திர டேட்டா திட்டங்களை பயன்படுத்துகின்றனர்.
ஒரு சிலர் அதிக விலை கொண்ட திட்டங்களை ரீச்சார்ஜ் செய்வதற்கு கஷ்டமாக இருப்பதால், குறைவான வசதிகளை கொண்ட பிளான்களை தேர்ந்தெடுத்து ரீச்சார்ஜ் செய்து கொள்கின்றனர்.
ஆனால், இலவசமாக கிடைக்கக்கூடிய வைஃபை கனெக்ஷனை பயன்படுத்திக் கொண்டால், டேட்டா செலவும் குறையும். இதில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை பொது இடங்களில் இருக்கும் வைஃபை கனெக்ஷனை எப்படி கண்டுபிடிப்பது? என்பதுதான்.
அந்த வகையில், பேஸ்புக் வழியாகவே இலவச வைஃபை கனெக்ஷன்களை கண்டுபிடித்து உபயோகிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இந்த வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் யூசர் இருவருமே பயன்படுத்திக்கொள்ளலாம்.
முதலில் பேஸ்புக் பக்கத்தை திறக்க வேண்டும். பின்னர், பேஸ்புக்கின் வலது மேல் புறத்தில் இருக்கும் மூன்று கோடுகளை கிளிக் செய்யுங்கள் அதில் தோன்றும் மெனுவில் உங்கள் பிரைவசி பாலிசி செட்டிங்ஸூக்குள் செல்ல வேண்டும்.
அதன் பின் அங்கு Find Wi-Fi என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, உங்களைச் சுற்றியுள்ள பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் பற்றி Facebook உங்களுக்குத் தெரிவிக்கும். ஒருமுறை எந்த வைஃபை கணெக்ஷனும் காட்டவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை கிளிக் செய்து தேடுங்கள்.
அதில் இலவச வைஃபை கிடைத்தால், அதனுடன் கணெக்ஷன் செய்து டேட்டாவை பயன்படுத்துங்கள். நகர்புறங்களில் அதிக இலவச வைஃபை கனெக்ஷன்கள் இருக்கும்.
இந்த டிப்ஸ் பெரும்பாலும் நகர்புறத்தில் இருக்கும் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும், கவனத்துடன் தேவைக்கு மட்டுமே இந்த வசதியை பயன்படுத்துங்கள். ஏனென்றால் இதில் உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக்கர்களும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.