உக்ரைனில் தொடர்ந்து 9-வது நாளாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அங்குள்ள இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெய்சங்கர், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தலைநகர் கிவ்வில் இந்திய மாணவர் ஒருவர் சுடப்பட்டது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.