அழகு சாதனப் பொருட்களை முகத்தில் பூசி தற்காலிகமாக ஜொலிப்பதை விட, வீட்டில் வளர்க்கும் துளசி செடியில் இருந்து கையளவு பறித்து வந்து கீழே கூறியிருப்பது போல் ஃபேஸ் பேக் ட்ரை செய்து பாருங்கள். சரும பிரச்சனைகள் மறைந்து, முகம் இயற்கையாக ஜொலிப்பதைக் காணலாம்.
மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியை கொண்டு முகத்தை மாசு, மருவற்ற பளிச் சருமமாக மற்ற முடியும். துளசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவை எளிதில் மறையச் செய்கிறது.
சில நூறு ரூபாய் நோட்டுக்களை செலவு செய்து, அழகு சாதனப் பொருட்களை முகத்தில் பூசி தற்காலிகமாக ஜொலிப்பதை விட, வீட்டில் வளர்க்கும் துளசி செடியில் இருந்து கையளவு பறித்து வந்து கீழே கூறியிருப்பது போல் ஃபேஸ் பேக் ட்ரை செய்து பாருங்கள். சரும பிரச்சனைகள் மறைந்து, முகம் இயற்கையாக ஜொலிப்பதைக் காணலாம். துளசியை வேறு சில பொருட்களுடன் கலந்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம், அதனால் சருமப் பிரச்சனைகள் நீங்குவது பற்றி விரிவாக பார்க்கலாம்.
வேம்பு மற்றும் துளசி ஃபேஸ்பேக்:
முகத்தில் அதிகப்படியாக எண்ணெய் வடிவது, பருக்கள், கருமை ஆகியவை பெண்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் சரும பிரச்சனைகள் ஆகும். இந்த பிரச்சனைகளை ஓட, ஓட விரட்ட வேம்பு மற்றும் துளசி கலந்த ஃபேஸ் பேக் சிறந்த தீர்வாக அமைகிறது. வேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு குணங்கள் பருக்கள், முகம் கருத்து போவது மற்றும் தோல் சிவந்து போதல், சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
துளசி மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்:
ஓட்ஸ் உடல் எடையை குறைப்பதில் மட்டுமல்ல சரும நிறத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. ஆயில் ஸ்கின், நார்மல் ஸ்கின், டல் ஸ்கின், ட்ரை ஸ்கின் என அனைத்து வகையான சருமத்தை கொண்டவர்களும் ஓட்ஸ் ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளலாம். ஓட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும். சருமத் துளைகள் அடைபடாமல் காக்கும். ஓட்ஸில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை இறந்த சரும செல்களை அகற்றவும், சருமத்தை மென்மையாக சுத்தப்படுத்தவும் உதவுகிறது. எனவே உங்கள் நிறத்தை மேம்படுத்த இயற்கையான அணுகுமுறையை நீங்கள் நாடினால், இந்த துளசி மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக் ஒரு சிறந்த தேர்வாகும்.
துளசி மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்:
ஃபுல்லர்ஸ் எர்த் என்றும் அழைக்கப்படும் முல்தானி மெட்டி, அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்சுவதன் மூலம் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. துளசியின் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் உருவாகும் வடுக்களை அழிக்கும். அதே சமயத்தில், முல்தானி மெட்டி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை வெளியேற்றி மீண்டும் அவை தோன்றுவதை தடுக்கிறது.
துளசி மற்றும் புதினா ஃபேஸ் பேக்:
துளசி மற்றும் புதினா இரண்டுமே ஃபேஸ் பேக்கிற்கு ஏற்ற சிறந்த மூலிகை கலவையாக உள்ளது. இரண்டையும் ஒன்றாக பயன்படுத்துவதால், முகத்தில் ஏற்படும் வீக்கம், தோல் சிவந்து போவது, காயங்களை ஆற்றுவது போன்றவற்றை விரைவாகச் சரி செய்கிறது. புதினா உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், பிரகாசம் மற்றும் மென்மையையும் கொடுக்கிறது.