வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்

by Editor News

வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து இருப்பதால் உடல் வறட்சியை போக்கும்.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதில் இருக்கும் சத்துகள் அடிக்கடி பசியெடுக்கும் உணர்வை கட்டுப்படுத்தி நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உடலில் ஏற்பட்டுள்ள வெப்பத்தை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் உடல் சூட்டை தணிக்கும்.

வாயில் துறுநாற்றம் இருப்பவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் வாய் துறுநாற்றம் குறையும். வாயில் துறுநாற்றம் ஏற்படுவதற்கு வயிற்று புண்ணும் ஒரு காரணமாக இருக்கும். வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வயிற்று புண்ணை குணப்படுத்தும்.

வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சீராக நடப்பதற்கு உதவுகிறது. தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

Related Posts

Leave a Comment