205
க்கிய ரஷ்ய வங்கிகள் பிரித்தானிய நிதி அமைப்பில் இருந்து விலக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இவை ‘ரஷ்யா இதுவரை கண்டிராத மிகப் பெரிய மற்றும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள்’ என்று ஹவுஸ் ஒஃப் காமன்ஸில் பிரதமர் கூறினார்.
அத்துடன், ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான எயிரோ ஃப்ளோட்டும் பிரித்தானியாவில் தரையிறங்க தடை விதிக்கப்படும்.
நேற்று (வியாழக்கிழமை) அதிகாலையில் வான்வழித் தாக்குதல்களுடன் தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து இந்த தடை வருகிறது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு ‘இரத்தக் கறை படிந்த ஆக்கிரமிப்பாளர்’ என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் கூறினார். அவர் உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக ‘உலகின் பார்வையிலும் வரலாற்றின் பார்வையிலும் கண்டிக்கப்படுவார்’ எனவும் தெரிவித்தார்.