333
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மாதம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கியது.
14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் ஆகியோர் இதுவரை எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இடையில் வேறு கமல்ஹாசன் இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடரப்போவதில்லை, பிக்பாஸ் 6வது சீசனில் காணலாம் என்று கூறிவிட்டார்.
அவருக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் அதற்கான புரொமோ இன்று வெளியாகும் என்கின்றனர்.
தற்போது நிகழ்ச்சி பற்றிய இன்னொரு தகவல் என்னவென்றால் இதில் இருந்து வனிதா திடீரென வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் எதனால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்ற காரணம் சரியாக தெரியவில்லை.