எதிரி என்றால் நேராக மோதனும்… அபிராமியை குறி வைக்கும் வனிதா !

by Column Editor

எதிரி என்றால் நேராக மோதனும் என்று வனிதா பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷ்ன் இருப்பதாகவும், அதனால் நம்மில் ஒருவரை தேர்ந்தெடுத்து சொல்லும்படி பிக்பாஸ் கூறியதாக பாலாஜி முருகதாஸ் கூறுகிறார். இதை நம்பிய ஹவுஸ்மேட்டுகள், இது ஒரு டாஸ்க் என்று நினைத்துக்கொண்டு எவிக்ஷ்னாக வேண்டிய நபர் குறித்து கூறுக்கின்றனர். ஆனால் கடைசியில் இந்த விஷயத்தை பிக்பாஸ் சொல்லவில்லை. நான்தான் சொன்னேன் என்று கூறி அனைவரையும் பிராங்க் செய்கிறார்.

இதனால் கோவமாகும் வனிதா, பாலாஜி முருகதாஸ் மீது கடுமையாக கோவமாகிறார். இந்த கோவம் அபிராமி மீது திரும்ப இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்கின்றனர்.‌ இதையடுத்து வனிதாவிடம் பேசும் அபிராமி, நான் கேமிரா முன்னோடி ஒருமாதிரியும், தனியாக ஒருமாதிரியும் இருக்க தெரியாது என்கிறார். இதைத்தொடர்ந்து வனிதாவிடம் சினேகன் காரசாரமாக வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அடுத்த ப்ரோமோவில் வெளியானது.

இந்நிலையில் இன்றைய தினத்தின் கடைசி ப்ரோமோவில் பேசும் நிரூப்பிடம் வனிதா பேசுகிறார். அதில் கடந்த ஐந்து சீசன்களில் காதலிப்பது போன்று எந்த போட்டியாளர்கள் விளையாடினார்கள். அது ஒரு பாதுகாப்பான விளையாட்டுதானே. அந்த மாதிரிதான் அபிராமி மற்றும் பாலா ஆகிய இருவரும் லவ் டிராக்கில் கேம் விளையாடுகின்றனர். எதிரி என்றால் நேராக மோதனும் என்று வனிதா தடாலடியாக பேசும் காட்சிகளும் அந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment