பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் லட்சுமி அப்பாவின் வருகைக்கு ஆர்வமாக காத்திருக்கிறாள்.
பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பிறந்த நாள் எபிசோடு இந்த வாரம் ஒளிப்பரப்பாகவுள்ளது.
இதுவரை பல திருப்பபுமுனைகளை சந்தித்திருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த 3 ஆண்டுகளில் பாரதியின் கல்யாணம் தொடங்கி, வெண்பா எண்ட்ரி, துர்கா வில்லத்தனம், பாரதி கண்ணம்மாவை வெளியே அனுப்பியது, DNA டெஸ்ட் என ஏகப்பட்ட திருப்பங்களை சந்தித்து ரசிகர்களை ஆர்வத்தில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் இயக்குனர். இதில் பிரவீன் கைத்தேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் பாரதி கண்ணம்மா சீரியல் இத்தனை தடைகளுக்கும் பிறகும் வெற்றிக்கரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாரதி வருவாரா? கண்ணம்மா, லட்சுமி அப்பா பற்றிய உண்மையை போட்டு உடைப்பாரா? என ஒட்டுமொத்த கண்ணம்மா சீரியல் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சீரியல் குழு இதுக் குறித்த எந்த புகைப்படமும் வெளியாகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், பாரதி பிறந்த நாள் விழாவுக்கு வந்தாரா? இல்லையா? என்பது தான் ட்விஸ்டே. ஒருவேளை அதுக் குறித்த புகைப்படம் வெளியானால் சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் சீரியல் குழு அந்த விஷயத்தில் கவனமாக இருக்கிறது.
இந்நிலையில், இன்றைய எபிசோடில் லட்சுமி, அப்பாவின் வருகைக்கு ஆர்வமாக காத்திருக்கிறாள். பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டை அலங்காரம் செய்து வருகிறாள். இதை பார்த்த கண்ணம்மாவுக்கு தூக்கி வாரி போடுகிறது. காரணம், பாரதி வரமாட்டேன் என்று தீர்மானமாக சொல்லிவிட்டார். லட்சுமி ஃபோன் செய்து பேசியும் பலனில்லை. இந்நிலையில் அவசரப்பட்டு சபதம் விட்டுவிட்டேனா? பாரதி வரவில்லை என்றால் லட்சுமி உடைந்து விடுவாள் என நினைத்து கவலைக் கொள்கிறார். கண்ணம்மா வீடு முழுவதும் லட்சுமி, அப்பா வருகை பற்றி எழுதி இருக்கும் அட்டைகளை பார்த்து கண்ணீர் வடிக்கிறார்.
சவுந்தர்யாவும் இந்த விஷயத்தில்கண்ணம்மாவுக்கு உதவி செய்ய முடியாமல் நிற்கிறார். பாரதி லட்சுமி கேட்ட கேள்வியை நினைத்து ஒருபக்கம் தூங்காமல் விழித்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் மொத்த குடும்பமும் நிம்மதி இல்லாமல் இருக்கின்றனர். பாரதி கண்ணம்மா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்தால் மட்டுமே இந்த அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். வருவாரா டாக்டர் பாரதி?