விளையாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயமா என வனிதாவை கமல் டார்க்கெட்டும் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஓடிடியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்சியமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அந்த வனிதா விளையாடிய குறித்து கமல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதா விளையாடி விதம் குறித்து கமல் பேசுகிறார். அதில் ஒரு விளையாட்டை விளையாட சொன்ன விதியை மீறி விளையாடுறாங்க. இல்லையென்றால் விளையாடாமலே உட்கார்ந்து விடுகிறாங்க. இது என்ன விளையாட்டில் தோற்றுவிடுவேன் என்ற பயமா. அவங்க பார்த்தால் விதியை நம்பாமல் இருப்பதுபோன்று தெரியவில்லை. அப்புறம் என்னவாக இருக்கும். ஒருவேளை இவங்களின் பயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறதோ. தெரியவில்லை அவங்களே கேட்டுவிடுவோம் என்கிறார் கமல்.
கமல் சொல்வது வனிதாவைதான் என்று நன்றாக தெரிகிறது. அதனால் இன்றைய நிகழ்ச்சியில் வனிதா ஒரு வழி செய்யப்போகிறார் என்பது தெரிகிறது. அதேபோன்று மற்ற போட்டியாளர் யார் யார் கமலிடம் வசமாக மாட்டப்போகிறார்கள் என்று அடுத்த ப்ரோமோ வந்தால்தான் தெரியும். இதில் முக்கியமாக இன்று ஒருவர் எலிமினேட் ஆகப்போகிறார் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day14 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/lxH4y5KfGb
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 13, 2022