‘என்றென்றும் புன்னகை’ சீரியலுக்குள் நுழையும் விஷ்னுகாந்த், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு ஒன்றும் புதிய முகம் அல்ல.
என்றென்றும் புன்னகை.- ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஆகும். இந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வந்துவிட்டால், இந்த சீரியல் ஒளிபரப்பத் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நினைவூட்டும் வண்ணம் ‘என்றென்றும் புன்னகை’ சீரியல் ஆனது கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 16 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நாடகத்தில் ‘சித்து’ என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமார், தற்போது சீரியலில் இருந்து விலகி உள்ளார். இதனையடுத்து சித்து என்கிற அவரின் கதாபாத்திரத்தில் நடிக்க மற்றொரு ஜீ தமிழ் டிவி சீரியல் நடிகர் ஆன விஷ்னுகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ‘என்றென்றும் புன்னகை’ சீரியலின் ஹீரோவாக நடித்து வந்த தீபக் குமாருக்கும் அவருடைய காதலியும் மற்றும் சின்னத்திரை நடிகையுமான அபிநவ்யாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையில் தான் தீபக் ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
ஆனால் உண்மையான சமாச்சாரம் இதுவல்ல, தீபக் குமார் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதால் தான் அவர் ஜீ தமிழ் சேனலை விட்டும், ‘என்றென்றும் புன்னகை’ சீரியலை விட்டும் வெளியேறிவிட்டதாக அரசல் புரசலாக தகவல் கிடைத்துள்ளது.
சீரியலுக்குள் நுழையும் விஷ்னுகாந்த், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு ஒன்றும் புதிய முகம் அல்ல. இவர் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியின் வெற்றி நாடகங்களான ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ மற்றும் ‘கோகுலத்தில் சீதை’ ஆகியவைகளில் நடித்து வருகிறார். இருப்பினும் ‘என்றென்றும் புன்னகை’ சீரியலின் வழியாகேவே விஷ்ணுகாந்த் சின்னத்திரையில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘என்றென்றும் புன்னகை’ சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
அறியாதோருக்கு ‘என்றென்றும் புன்னகை’ என்கிற சீரியல் ஆனது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மங்கம்மா காரி முனவாரலு’ என்கிற தெலுங்கு சீரியலின் கதையை தழுவி எடுக்கப்படும் ஒரு நாடகமே ஆகும்.
அதாவது (தமிழில்) ஆண்டாள் என்கிற கதாபாத்திரம் தன் பேரனுக்கு, தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஆண்டாளின் கட்டுப்பாட்டின் கீழ் தான் ஆகாஷ் வாழ்ந்து வருகிறார் என்பதையும், அவர் சுயமாக எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை, சுதந்திரமாக இருப்பதில்லை என்பதை தென்றல் உணர்கிறாள்.
பிறகு தென்றல், ஆகாஷை மணந்து பிடிவாத குணம் கொண்ட ஆண்டாளின் கட்டுப்பாட்டில் வாழ ஒப்புக் கொள்கிறாரா அல்லது அவளுக்கான உண்மையான அன்பை வேறொரு நபரிடம் கண்டுபிடிப்பாளா என்பதே ‘என்றென்றும் புன்னகை’ சீரியலின் கதை சுருக்கமாகும்.