வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், காப்பர், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து , மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
நம் சமையலறையில் உள்ள பல வகையான மசாலாப் பொருட்களானது நாம் சமைக்கும் உணவுகளுக்கு கூடுதல் சுவையை சேர்ப்பதற்கு மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் – வெந்தயம்.
இந்த மசாலா பொருளானது இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள யூரிக் அமில அளவுகளை கட்டுப்படுத்தும் திறனை கொண்டது. மேலும் வெந்தயம் இரத்த சோகையை குணப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வையும் தடுக்கிறது.
வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், காப்பர், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து , மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இந்த சத்துக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும்.
வெந்தயத்தில் கரையத்தக்க நார்ச்சத்து அதிகமாக உள்ளது, மற்றும் வெந்தயம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவையும் மேம்படுத்த உதவுகிறது. கார்போஹைட்ரேட்டின் செரிமானம் (டைஜஷன்) மற்றும் உறிஞ்சுதலை (அப்ஷார்ப்ஷன்) குறைப்பதன் மூலம், வெந்தயம் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெந்தயத்தில் வேறு என்னென்ன நன்மைகள் உள்ளன?
செரிமானத்தை மேம்படுத்தும்:
வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம் உடலின் செரிமான அமைப்பு மேம்படும். இது பசியின்மை பிரச்சனையை குணப்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்:
வெந்தயத்தை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வெந்தயம் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் கூட உதவி புரிகிறது.
முடி உதிர்வை குறைக்கும்:
முடி உதிர்தல், முடி வலுவிழத்தல் மற்றும் முடி நரைத்தல் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் வெந்தயம் உங்களுக்கு உதவும்.
இரத்த சோகை மற்றும் கீல்வாதத்தை நீக்கும்:
வெந்தய விதைகளை உணவில் சரியாக சேர்த்துக் கொள்ளும்போது, இரத்த ஓட்டத்தில் உள்ள யூரிக் அமிலதத்தின் அளவு குறைகிறது, அதனுடன் கீல்வாதம் ஏற்படும் அபாயமும் குறைகிறது. இரத்தத்தின் அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், இரத்தத்தின் நச்சுக்களை நீக்குவதன் மூலமும் வெந்தயம் இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றன.
5. வலி நிவாரணமளிக்கும்:
முதுகு வலி, நரம்புகளில் உள்ள வலி, வீக்கம், பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றில் அசௌகரியம் போன்றவைகளுக்கு வெந்தயம் பயனளிக்கும் ஒரு மருந்தாகும். முழங்கால் மூட்டு வலி முதல் தசைப்பிடிப்பு வரை உடலின் எந்த பகுதியிலும் ஏற்படும் வலிகளுக்கு வெந்தயத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
6. ஆஸ்துமா மற்றும் இருமல் குணமாகும்:
இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் மார்பில் நெரிசல் போன்ற அசௌகரியங்களில் இருந்து வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
7. இரத்தப்போக்கு பிரச்சினைகளை தீர்க்கும்:
மூக்கின் வழியாக இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் காலத்தின் போது நிகழும் அதிக அளவிலான இரத்தப்போக்கு உள்ளிட்ட இரத்தப்போக்கு பிரச்சினைகளுக்கும் வெந்தயம் உதவும்.
வெந்தயத்தை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம்?
வெந்தயத்தை தயிர், கற்றாழை ஜெல் அல்லது தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து உச்சந்தலையில் தடவவும். இதன் விளைவாக பொடுகு, முடி உதிர்தல், நரை முடி போன்ற சிக்கல்கள் குறையும்
வெந்தயப் பேஸ்ட்டை ரோஸ் வாட்டருடன் சேர்த்து, முகத்தில் உள்ள கருவளையங்கள், முகப்பருக்கள், மற்றும் சுருக்கங்களில் தடவினால், நல்ல மாற்றங்களை காண முடியும்.