கொரியா கண்டுபிடிப்பு! மூக்கை மட்டும் மறைக்கும் கோஸ்க் மாஸ்க்

by Column Editor

முகக்கவசம் அணிந்து சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சிரமமாக இருப்பதாக கருதியதன் விளைவாக இந்த கோஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கொரோனா பரவலை தடுக்க மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான புதிய வகை மாஸ்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு கோஸ்க் (Kosk) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, கைகளை சானிட்டைசர் மூலம் சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஆகிய நடமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மாஸ்க்கை பொறுத்தவரை சர்ஜிக்கல் மாஸ்க், என்95 மாஸ்க் என பல்வேறு மாஸ்க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல, தங்கத்திலான மாஸ்க், விதவிதமான ஃபேன்சி மாஸ்க்களும் வெளியாகி கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில், தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று, மூக்கை மற்றும் மறைக்கும்வகையிலான புதிய வகையான மாஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கோஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு என பொருள் தரும் ‘கோ’ என்ற கொரியன் சொல்லையும் மாஸ்க் என்ற ஆங்கில சொல்லையும் இணைத்து இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிந்து சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சிரமமாக இருப்பதாக கருதியதன் விளைவாக இந்த கோஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. KF80 mask என்ற பெயரில் பல்வேறு ஆன்லைன் விற்பனை தளங்களிலும் இந்த மாஸ்க் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment