இந்தோ – சைனீஸ் முறையில் எளிமையான ஸ்நாக் செய்ய வேண்டும் என்றால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
மிகவும் சாஃப்ட் ஆகவும், சுவையாகவும் இருக்கக் கூடிய பன்னீருக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உண்டு. பன்னீர் அல்லது பாலாடைக்கட்டி என்று சொல்லக் கூடிய இதனை கபாப், டிக்கா, பக்கோடா, பாப்கார்ன் என பல, பல வகைகளில் சுவை மிகுந்ததாக தயாரித்து சாப்பிட முடியும்.
எல்லாவற்றையும் விட, சைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமானது பன்னீர் தான். இதில் புரதச்சத்து நிறைவாக நிரம்பியுள்ளது. ஆகவே, நாம் வீட்டில் எளிதாக தயாரிக்க கூடிய பன்னீர் ஸ்நாக்ஸ் குறித்து நாம் இன்றைக்கு பார்க்க இருக்கிறோம். இதை நீங்கள் மிக எளிமையாக 20 நிமிடங்களில் செய்யலாம். நாவின் சுவைகளை தூண்டக் கூடிய இந்த ஸ்நாக்ஸ், நிச்சயமாக உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்.
20 நிமிடங்களில் இதனை செய்துவிடலாம். குளிர்காலங்களில் நல்ல ஸ்நாக்ஸ் ஆக இருக்கும். ரைஸ் அல்லது நூடுல்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 220 – 240 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – ½ காப்சியம்
பூண்டு – 6 பல்
வினிகர் – 1 டீ ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் – 4 -5
எண்ணெய் -1- 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
சீரகம் -½ டேபிள் ஸ்பூன்
சர்க்கரை -½ டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நறுக்கப்பட்ட கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
* முதலில் பூண்டு பல், காஷ்மீரி மிளகாய், உப்பு, சர்க்கரை மற்றும் வினிகர் சேர்த்து ஒரு ஜாரில் கலக்கவும்
* இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நைஸ் ஆக அரைக்கவும். மிக கெட்டியாக வந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கலவையை சில நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
* இப்போது கடாயை எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்க்கவும்.
* எண்ணெய் காய்ந்தவுடன், அதில் சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* இதனுடன் காப்சியம் மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இது மொறுமொறுப்பு கொடுக்கும்.
* இப்போது அரைத்த வைத்திருந்த கலவையை சேர்த்து, லேசான சூட்டில் வதக்கி வேக விடவும்.
* இப்போது நன்றாக வெந்தவுடன் கலவை இறுகி வரும். பச்சை வாசம் நீங்கி கம, கமவென மனம் கிளம்பும். எண்ணெய் பிரிந்து வரும். பூண்டு அதிகமாக வதங்கிவிட கூடாது.
* இப்போது பன்னீரை எடுத்து க்யூப் போல நறுக்கி மற்றொரு கடாயில் போடவும்
* இப்போது 2,3 நிமிடங்கள் வதக்கவும். அதிகமாக வதக்கினால் ஜவ்வு போல மாறிவிடும்.
* இப்போது பன்னீரை, ஏற்கனவே உள்ள கலவையுடன் சேர்த்து 2,3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
* இப்போது கார்லிக் பன்னீர் மீது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.