உங்கள் முகம் மிகுந்த பொலிவு பெற வேண்டும் என்றால் இந்த கலவையை நீங்கள் உபயோகிக்கலாம். முகத்தில் உள்ள இறந்த செல்களை உயிர்பித்து உங்கள் முகத்தில் பளபளப்பும், புதுப் பொலிவும் இது கொண்டு வரும்.
சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்பதே பலருடைய எண்ணமாக இருக்கும். நீங்களும் கூட பார்லர் சென்று பலவிதமான, விலை மிகுந்த அழகூட்டும் நடவடிக்கைகளை முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் அவை எல்லாம் வீண் ஆகிவிட்டதா?
கவலை வேண்டாம். உங்கள் சருமத்தை பொலிவு பெற வைப்பதற்கான ரகசியம் உங்கள் சமையல் அறையில் ஒளிந்து இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆமாம் உண்மைதான். இந்தியா முழுவதிலும் வீட்டு உணவில் மிக முக்கிய பங்காற்றுகிற அரிசியை நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்கிறோம். நம் சுவை உணர்ச்சிகளை அது தூண்டுகிறது. ஆனால், அரிசியில் சரும நலன் காக்கும் ஆச்சரியம் மிகுந்த விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. இருப்பினும், அரிசியை நீங்கள் அப்படியே பயன்படுத்திக் கொள்ள முடியாது. அதை மாவாக அரைத்து, இன்னும் பல கலவைகளை சேர்த்து உங்கள் முகத்திற்கான ஃபேஸ் பேக் தயாரிக்கலாம்.
அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக்:
அரிசி மாவு உங்கள் முகத்தில் உள்ள கறைகள், சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை குறைக்கும். கடலை மாவு உங்கள் முகத்தை சுத்தம் செய்யும். இதனுடன், தேன் சேர்த்துக் கொள்வதால் உங்கள் சருமத்தில் ஈரப்பதம் கிடைக்கும். கொஞ்சம் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை:
ஒரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும் இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலக்கவும். இப்போது 3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். முகத்தை மிருதுவாக மாற்றுவதற்கு ரோஸ் வாட்டர் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
அரிசி மாவு, ஓட்ஸ், தேன் மற்றும் பால் ஃபேஸ் பேக்:
உங்கள் முகம் மிகுந்த பொலிவு பெற வேண்டும் என்றால் இந்த கலவையை நீங்கள் உபயோகிக்கலாம். முகத்தில் உள்ள இறந்த செல்களை உயிர்பித்து உங்கள் முகத்தில் பளபளப்பும், புதுப் பொலிவும் இது கொண்டு வரும்.
செய்முறை:
ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு எடுக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் கலந்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் இயற்கை தேன் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக பால் சேர்த்து கலக்கவும். இப்போது இரண்டு, மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு 15 நிமிடம் காயவிடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து கழுவவும்.
அரிசி மாவு ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் தேன் ஃபேஸ் பேக்:
இந்த கலவையைப் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை கொடுக்கும்.
செய்முறை:
2,3 ஆப்பிள் துண்டுகளை நசுக்கி எடுத்துக் கொள்ளவும். மூன்று முதல் நான்கு சுளைகளின் ஆரஞ்சு ஜூஸ் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும். 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும். நன்றாக கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு காய வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து கழுவவும்.