விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி ‘96’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிட்டியது. பிரேம்குமார் இயக்கிய இப்படம், பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர். மேலும், காதலர்கள் கொண்டாடித் தீர்த்த ‘96’படத்தின் ராம், ஜானு கதாப்பாத்திரம் எதார்த்தமாக இருந்ததுடன், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக அமைந்து வெற்றி பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டாலும் ரசிகர்கள் தற்போதும் இந்தப் படத்தை கொண்டாடி வருவது நிதர்சனம்.
தற்போது 96 படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் வேலைகள் நடந்து வருவதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் பாகத்தில் மீண்டும் விஜய் சேதுபதி, த்ரிஷா கூட்டணி இணையமா? 96 நடத்திய மேஜிக் மீண்டும் திரையில் காண வரம் கிட்டுமா என்ற பொறுத்திருந்து பார்ப்போம்!