விஜய் டிவி-ல் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானவர் அஸ்வின்.
இவருக்கு திடீரென சேர்ந்த ரசிகர்கள் கூட்டத்தை தொடர்ந்து ஆல்பம் சாங்ஸ் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் எல்லாம் வர தொடங்கியது.
அதன்படி கடைசியாக இவர் ஹீரோவாக நடித்திருந்த என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியது பெரிய சர்ச்சையாக மாறியது.
40 கதைகள் கேட்டு தூங்கியதாக அவர் கூறியதனால் இப்போது வரை நெட்டிசன்கள் அவரை Sleeping Star அஸ்வின் என்று தான் அழைத்து வருகின்றனர்.
இதனிடையே மீண்டும் இணையத்தில் அஸ்வின் ரசிகர்களை Prank செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. இதை கண்ட நெட்டிசன்கள் தற்போது கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும் தற்போது அஸ்வின் அவரின் இன்ஸ்டா ஸ்டோரியில் அவரின் Hater’s-க்கு பதிலடி கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.