125 நாகப்பாம்புகளுக்கு இடையில் கிடந்த நபர்! அலறியடித்த பக்கத்துவீட்டினர்கள்; பகீர் சம்பவம்!

by Editor News

பாம்பு என்றால் அஞ்சாதவர்களே இருக்க முடியாது.. பாம்பை பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால், தற்போது பாம்பால் நடந்திருக்கும் ஒரு விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆம், கிட்டத்தட்ட 125 பாம்புகள் ஒருவரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. அமெரிக்காவின் மேரிலாந்தின், சார்லஸ் கவுண்டியில் வசிப்பவர் வந்த 49 வயது நபர் ஒருவர் அதிக விஷயமுடைய 125 நாகப்பாம்பு இடையில் இறந்துகிடந்துள்ளார்.

இந்த தகவலை அருகாமையில் இருந்த வீட்டுக்காரர் அலறியபடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த பாம்புகள் அனைத்தையும் மீட்க சார்லஸ் கவுண்டி அனிமல் கண்ட்ரோல் முயற்சிகளை மேற்கொண்டது.

இந்த வினோதமான சம்பவம் குறித்து அனிமல் கண்ட்ரோல் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தகவல் அளித்தார். அந்த தகவலின்படி, அனைத்து பாம்புகளும், முறையாக அனுமதி பெற்ற அமைப்புகளுக்கு அனுப்படுகிறது.

விலங்குகளை பராமரிக்க அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாம்புகள் தனிப்பட்ட முறையில் தத்துக் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த மரணம் பிரேத பரிசோதனையும் முடிவுகள் மூலமும் இந்த விசித்திரமான மரணத்திற்கான காரணம் தெரியவரலாம்.

Related Posts

Leave a Comment