மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை சிறப்பு செய்யும் விதமாக அவரது படங்களை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சில வாரங்களுக்கு முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகையே உலுக்கியது. அவரது மறைவு கன்னட மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருக்கு இந்தியாவில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ் பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அமேசன் பிரைம் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். வரும் பிப்ரவரி 1 முதல் 28 ஆம் தேதி வரை புனீத் ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள காவலுதாரி, மாயா பஜார், யுவரத்னா, லா மற்றும் பிரெஞ்ச் பிரியாணி ஆகிய படங்கள் அனைத்தும் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் புனித் ராஜ்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 3 புதிய படங்களையும் அமேசன் பிரைம் வாங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.