சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ரூ.36,648 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் பெண்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும், அது சிறந்த முதலீட்டுக்கான காரணியாகவே பார்க்கப்படுகிறது. ஆபரணங்களின் மீதான ஆசையை தாண்டி பெண்கள் எதிர்காலத்திற்கான சேமிப்பாக எண்ணி தங்கத்தில் மூதலீடு செய்து வருகின்றனர். தென்னிந்தியாவிலேயே தங்க வர்த்தகத்தில், மற்ற நகரங்களை விட சென்னை முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. நேற்று மாலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி மீண்டும் சவரனுக்கு ரூ. 272 விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 4,547க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 34 உயர்ந்து, 4, 581 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,376-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 272 உயர்ந்து ரூ.36,648-க்கு விற்பனையாகிறது.
இதேபோல் கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4, 581 விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் தங்கம் விலையைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்திருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி ரூ. 67.80 விற்பனை ஆன ஒரு கிராம் வெள்ளி விலை, கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ. 68.80 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,800 க்கு விற்பனையாகிறது.