பிக் பாஸ் 5 இறுதிப்போட்டி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. ராஜு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் டைட்டிலை தட்டிச்சென்றார். இதனிடையே இறுதிப்போட்டியில் கமல் தெரிவித்திருந்த அறிவிப்பு பிக் பாஸ் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி OTTயில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார். மேலும் இதை தானே தொகுத்து வழங்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். ஜனவரி 30 ஆம் தேதி முதல் இந்நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவுள்ளது.
மேலும் இதுவரை நடந்துமுடிந்த பிக் பாஸ் சீசன்களில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால் பிக் பாஸ் டைட்டிலை வென்றவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள இயலாது. டைட்டிலை இதுவரை வெள்ளத்தவர்களே இதில் கலந்துகொள்ளமுடியும்.13 முதல் 15 போட்டியாளர்கள் வரை இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
ற்கனவே முதல் சீசனில் பங்குபெற்ற ஜூலி, மூன்றாம் சீசனில் பங்குபெற்ற வனிதா மற்றும் நான்காம் சிசனிலிருந்து அனிதா சம்பத் ஆகியோர் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் யார்யார் கலந்துகொள்ள போகிறார்கள், இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மணிநேர தொகுப்பாகவே ஒளிபரப்பப்பட்டது. ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 நேரமும் ஒளிபரப்ப பட இருப்பதால் இந்நிகழ்ச்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பது ரசிகர்களின் பொதுவான கருத்தாக நிலவிவருகிறது குறிப்பிடத்தக்கது.