பேரிச்சம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?..!

by Editor News

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவோம். நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இன்று விரிவாக காணலாம்.

பேரிச்சம்பழம் எளிதில் ஜீரணம் ஆகும் சதைப்பற்று மற்றும் சர்க்கரை சத்துக்களை கொண்டது. இதனை சாப்பிட்டதும் உடலுக்கு புத்துணர்ச்சியும், சக்தியும் கிடைக்கிறது. குடல் பகுதியில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் வெளியேற்றப்படும்.

இதில் உள்ள டேன்னிஸ் என்ற நோயெதிர்ப்பு பொருள் நோய்தொற்றில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இரத்தம் வெளியேறுதல் மற்றும் உடல் வெப்பமாவதற்கு எதிராக செயல்பட்டு உடலை பாதுகாக்கிறது.

இதனைப்போல, வைட்டமின் ஏ சத்து அதிகளவில் உள்ளது. இது கண்களின் பார்வைக்கும், குடலின் ஆரோக்கியத்திற்கும், சரும அழகுக்கும் அவசியமாகிறது. சிறந்த நோயெதிர்ப்பு பொருளாக செயல்படும் பேரீச்சம்பழத்தில் லூடின், சி சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன.

இது உடற்செல்களை காப்பது மட்டுமல்லாது, தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கலை உடலில் இருந்து விரட்டுகிறது. மார்பு, குடல், தொண்டை, நுரையீரல், இரைப்பையை தாக்கும் புற்றுநோயை விரட்டுகிறது. பேரீச்சம்பழத்தில் உள்ள பொட்டாசியம் தாது உடற்செல்களையும், உடலையும் பாதுகாக்கிறது.

இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது. பக்கவாத பிரச்சனைகள், இதய நோய் பிரச்சனையில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

Related Posts

Leave a Comment