உதட்டில் வறட்சி ஏற்படுவதை இப்படியும் போக்கலாம் !

by Editor News

முகத்தின் அழகை அதிகரிக்கும் முக்கியமான உறுப்பில் ஒன்றாக உதடு உள்ளது. இந்த உதட்டில் சிறு பாதிப்பு இருந்தாலே முகத்தின் அழகே கெட்டு விடும். ஆம், சிலருக்கு காலநிலை மாற்றங்கள், நீர்சத்து குறைபாடு, அசிட்டிக் அளவு அதிகமாக இருத்தல், குளிர்சாதன வசதி கொண்ட அறையில் இருத்தல், உதட்டில் அதிகமாக எச்சில் வைத்தல் போன்ற பல காரணங்களால் வறட்சி அடைந்து புண்கள் ஏற்படுகிறது. இதனை எளிய முறையில் நம் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெயை கொண்டு லிப் பாம் தயாரித்து எளிய முறையில் கட்டுப்படுத்தலாம். இதனை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

1. தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து பயன்படுத்தலாம். அதாவது ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், கற்றாழை ஜெல் மற்றும் தேன் மெழுகு கலந்து கொள்ளவும். அதனை மைக்ரோ ஓவன் அல்லது அடுப்பில் சிறு தீயில் வைத்து நன்றாக உருகவிடவும். பின்னர் அதனை குளிரவைத்து சிறிய பாட்டிலில் அடைத்து உதட்டில் தடவி வந்தால் இந்த வறட்சி மாறி உதட்டின் அழகு அதிகரிக்கும்.

2. ஒரு ஸ்பூன் வாஸ்லைனை நன்கு உருக வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இது நன்கு குளிர்ந்ததும் ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து அடிக்கடி உதட்டில் தடவி வந்தால் இந்த வறட்சி மாறும்.

3. உதட்டின் வறட்சி மாற வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக உருக்கவும். அவை அனைத்தும் உருகி ஒன்றாக கலந்ததும் இறக்கி பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்துங்கள்.

4. ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகை நன்கு உருக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் லாவண்டர் எண்ணெய் சிறிதளவு ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை பாட்டிலில் ஊற்றி குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்தி வந்தாலும் எளிதாக வறட்சி மாறும்.

Related Posts

Leave a Comment