நிரூப் இறுதிப்போட்டியில் தன்னை தக்கவைத்து கொள்ள முயற்சிப்பது தெரிகிறது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 5ல், தற்போது ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, நிரூப் நந்தகுமார் மற்றும் அமீர் ஆகிய 6 போட்டியாளர்கள் இறுதி கட்ட போட்டியில் உள்ளனர்.
அடுத்த வாரம் இந்நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் டிக்கெட் டு பின்னாலே வெற்றியாளர் அமீரை தவிர மீதம் உள்ள 5 பேரும் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் இந்தவாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது. இதனிடையே இந்த வாரம் பணப்பெட்டியை எடுக்கப் போவது யார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ரூ. 3 லட்சத்துடன் தொடங்கிய இந்த டாஸ்க்கின் இறுதிக்கட்டம் நேற்றை நிகழ்ச்சியில் நடைபெற்றது.
நேற்று சூட்கேஸ் தொகையானது ரூ. 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. மேலும் இதுதான் இறுதி தொகை இதனை யாரும் எடுக்காதபட்சத்தில் இந்த டாஸ்க் ரத்து செய்யப்படும் என பிக் பாஸ் அறிவித்தார். பிக் பாஸ் சீசன் 3 மற்றும் 4. இரண்டு சீசன்களிலும் சூட்கேஸ் டாஸ்க்கில் 5 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்ட போதே, இறுதி கட்டத்தில் இருந்த போட்டியாளர்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள். ஆனால், தற்போது 12 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அப்போது அமீர் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறப் போவதாக சீரியசாக பேசினார். இதனை கேட்ட சிபி, அவரை கட்டியணைத்து வாழ்த்துகள் சொன்னார். அப்போது அமீர், கேமராவை பாரு பிராங்க் செய்தேன் என கலாய்த்தார். இதனை தொடர்ந்து சிபி தான் பணத்தை எடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். அப்போது தாமரை சிபியிடம் இன்னும் ஒரு வாரம் தானே இருந்துவிட்டு போகலாம் என்று கூறினார். ஆனால் அதனை மறுத்துவிட்ட சிபி, தாமரையிடம் உங்களுக்கு இந்த பணம் தேவைப்படும், எடுக்க விரும்பமா? என்றார். ஆனால் தாமரை விருப்பம் இல்லை என கூறவே சிபி திட்டவட்டமாக முடிவு செய்தார்.
இதுகுறித்து விளக்கிய சிபி, பணத்திற்காக இல்லை, எனக்கு போகணும்னு மைண்ட் செட் ஆகிருச்சு. எனக்கு சுத்தமா கான்ஃபிடன்ஸ் போயிடுச்சு, எதனால் என்று தெரியவில்லை. இதற்கு மேல் நான் இங்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் பொய்யாக நடிக்க வேண்டிய நிலை வரும், அது என்னால் முடியாது என கூறிவிட்டு சூட்கேஸை எடுத்து கொண்டு வெளியேறினார். அவருக்கு பிக் பாஸ் மற்றும் சக போட்டியாளர்கள் வாழ்த்துக்கள் கூறினர். இதனிடையே இந்த வாரம் சிபி, வாக்குகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் ஃபோன் ஒலிக்கிறது. அதில், “இந்த வீட்டுக்கான இறுதி டேர், உலகத்தின் பார்வையில ஒரு முகத்தை மறைச்சிருக்காரு. ஆனா அத நாங்க கவனிச்சோம்னு தேர்ந்தெடுத்து சுத்தம் செஞ்சு நேரடியா இறுதி வாரத்துக்கு அனுப்பலாம்” என்கிறார் பிக் பாஸ். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், முதல் ப்ரோமோவில் கொடுத்த டாஸ்க் குறித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது பிரியங்கா நான் எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறேன் என பேசுகிறார்.
இதனை தொடர்ந்து தன்னை தவிர யாரும் அப்படி இல்லை என கூறுகிறார். தன்னை தானே கூறுவதால் நிரூப் இறுதிப்போட்டியில் தன்னை தக்கவைத்து கொள்ள முயற்சிப்பது தெரிகிறது. மறுபுறம் பிரியங்கா, ராஜுவிடம் நீ வெளியிலும் இப்படி தானா? இல்லை இங்கு நடிக்கிறாயா? என நான் உன்னிடம் நேரடியாக கேட்கிறேன் என பேசும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று தேர்வாகும் நபர் நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் இரண்டாவது நபராக இருப்பார் என்பதால் அது யார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இதனால் நாமினேஷனிலும் மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.