423
செய்முறை:
விரிப்பில் நிமிர்ந்து சுகாசனம் – பத்மாசனம் – வஜ்ராசனம் எதாவது ஒரு ஆசனத்தில் அமரவும். முதுகுத்தண்டு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் 2 0 வினாடிகள் கவனம் செலுத்தவும்.
பின் கண்களை திறக்கவும். கைவிரல்கள் ஒவ்வொரு நுனியையும் படத்தில் உள்ளது போல் தொடவும். எல்லா விரல் நுனிகளும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கின்றது. இரண்டு நிமிடங்கள் செய்யவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
பயன்கள் : உடலில் எல்லா உறுப்புகளுக்கும் பிராண சக்தி நன்றாக கிடைக்கும். உடல், மன சோர்வை நீக்கி புத்துணர்வு தருகின்றது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். ஹாக்கினி முத்திரையால் ஞாபக சக்தி அதிகரிக்கும். நேர்முக எண்ணங்கள் அதிகமாகும். இரத்த அழுத்தம் வராமல் வாழலாம்.