இந்தியாவில் இதுவரை 1,431 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,775 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 13,154 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 16,764 தொற்று எண்ணிக்கை,13,154 ஆக பதிவானது. இந்த சூழலில் தினசரி கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 8,949 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். நேற்று 220 பேர் பலியான நிலையில் இன்று பலி எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது.
அத்துடன் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 1,431 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 454 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 118 ,குஜராத்தில் 115, கேரளாவில் 109 , ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 ,அரியானாவில் 37, கர்நாடகாவில் 34, ஆந்திரப் பிரதேசத்தில் 17 , மேற்கு வங்கத்தில் 17, ஒடிசாவில் 14 என மொத்தம் 23 மாநிலங்களில் 1,431 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்சமாக உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 167 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 57 பேர் குணமாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 40 பேர் குணமாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை கொரோனாவிலிருந்து 488 பேர் குணமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.