246
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் வெளியாகவுள்ள வலிமை படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் ரசிகர்களும் காண ஆவலோடு உள்ளனர்.
இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டிருந்த முக்கியமான நாள் இன்று தான், அதற்கு முக்கிய காரணமே இன்று தான் வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.
மேலும் தற்போது வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ள நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை பட ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.