547
பிக்பாஸ் 5வது சீசன் 4 சீசன்களை விட கொஞ்சம் வித்தியாசமாக நடக்கிறது.
அதிக பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என இதில் கொஞ்சம் மாறுபட்ட விஷயங்கள் நடந்தன. போட்டியின் ஆரம்பத்தில் நிகழ்ச்சி கொஞ்சம் டல் அடித்தாலும் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க போட்டிகள் கடுமையாகி வருகின்றன.
நேற்றைய நிகழ்ச்சியில் தாமரை மற்றும் பிரியங்காவிற்கு ஏற்பட்ட சண்டை பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் வீட்டில் இருக்கும் சின்ன பிரச்சனையை பெரிதாக்குவது யார் என பிக்பாஸ் கேட்டுள்ளார்.
அதற்கு போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி நாமினேட் செய்கிறார்கள்.