டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோன் மாறுபாடு லேசான நோயை ஏற்படுத்தக்கூடும் என ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப ஆய்வுகளை கண்டறிந்த பின்னர், கொவிட் தரவைக் கண்காணித்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.
இந்த கண்டுபிடிப்புகள் நல்ல செய்தி என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் ஒரு பெரிய அலை தொற்றுகள் இன்னும் தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கக்கூடும் என்று எச்சரித்தனர்.
நேற்று (புதன்கிழமை) முதல் முறையாக 100,000க்கும் மேற்பட்ட புதிய தினசரி நோய்த்தொற்றுகளை பிரித்தானியா தெரிவித்துள்ளது.
வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிலாந்தில் மேலும் தடைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கிறிஸ்மஸுக்கு முன் எந்த மாற்றத்தையும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிராகரித்துள்ளார். இந்த மாறுபாடு நாம் முன்பு பார்த்ததை விட வேகமாக நாடு முழுவதும் தொடர்ந்து எழுகிறது என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.
இந்த கிறிஸ்மஸில் கொவிட் நோயிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க கூடுதல் சிறப்பு கவனம் எடுக்குமாறு மக்களை அவர் வலியுறுத்தினார்.