உலக அளவில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
நடிகர் விஜய் வாத்தியாக நடித்து மாபெரும் ஹிட்டடித்த படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியான இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.
விஜய் சேதுபதி பவானி என்ற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். அனிரூத் இசையில் உருவான பாடல்கள் பெரிய ஹிட்டடித்த நிலையில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பாடல்களை யூட்யூடிப்பில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் இசை உலகளவில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 2020 -ஆம் ஆண்டின் அதிக ஸ்ட்ரீம் செய்யப்பட்ட தமிழ் ஆல்பமாக உலகளாவிய இசை அட்டவணையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் இடம்பிடித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் படைத்த இந்த சாதனை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அனிருத், விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
#Master makes it to the global music charts as the highest- streamed Tamil album of 2020 😊
Thank you @actorvijay sir @Dir_Lokesh @XBFilmCreators @7screenstudio @Jagadishbliss and all the fans 🤗 pic.twitter.com/V0dKgzioga— Anirudh Ravichander (@anirudhofficial) December 22, 2021