பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்களின் புனித நூல் குரு கிரந்த் சாகிப் வைக்கப்பட்டிருந்த இடத்தில் அங்கு சென்ற இளைஞர் ஒருவர் அந்தப் புனித நூலை அவமதித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பணியில் இருந்த எஸ்.ஜி.பி. சி ஊழியர்கள் இளைஞரை அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.
அந்த இளைஞருக்கு 30 வயது இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது. அந்த இளைஞரின் அடையாளம் குறித்த தேடல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த நபர் எப்பொழுது கோவிலுக்கு சென்றார். அவருடன் எத்தனை பேர் வந்தார்கள் என்பது பற்றிய கேள்விகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன . சட்டம்-ஒழுங்கை பராமரிக்க எஸ்.ஜி.பி. சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே சீக்கிய பக்தர்களும் பல்வேறு அமைப்புகளும் படுகொலை சம்பவத்திற்கு கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.
சீக்கியர்களின் புனித நூலை அனைத்து மதத்தினரும் வழிபடலாம் என்று முன்னாள் எஸ்.ஜி.பி.சி தலைவர் கூறியிருக்கிறார். அவர் மேலும், பல சதித்திட்டம் மேற்கொள்ள முயற்சிகள் நடப்பதாகவும், இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார். நடந்த படுகொலை சம்பவம் குறித்து அவர் கவலை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த சம்பவத்தால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அஸ்வினி சர்மாவின் அரசை குறை கூறியிருக்கிறார் பாஜக தலைவர். அவர் மேலும், இந்த படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த காங்கிரஸ் அரசு மீண்டும் தவறிவிட்டதாக கூறியிருக்கிறார். அவர் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.