ஓமிக்ரோன் புயலுக்கு வேல்ஸ் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘புயலுக்கு முன் வேல்ஸ் அமைதியில் உள்ளது. ஓமிக்ரான் புயல் நம் வழியே வருவதை நாங்கள் காண்கிறோம், அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும்’ என கூறினார்.
இந்த மாறுபாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டிசம்பர் 26ஆம் திகதிக்குப் பிறகு வேல்ஸில் இரவு விடுதிகள் மூடப்படும்.
கடைகள் மற்றும் பணியிடங்களில் சமூக விலகல் உள்ளிட்ட வணிகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று வேல்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
சிறிய கிறிஸ்மஸைக் கொண்டாடவும், பரந்த நண்பர்களின் வட்டங்களை சந்திப்பதைத் தவிர்க்கவும் மக்களிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
வேல்ஸில் ஒமிக்ரோன் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 33 அதிகரித்து 95ஆக இருந்தது.