ஆல்ஃபாபெட் இன்க் நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்று கூறியுள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இருப்பினும் இன்னும் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது பல நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது உலகளவில் பிரபலமான கூகுள் நிறுவனமும் தடுப்பூசி செலுத்துதல் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்ததுள்ளது.
ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொண்டால் வேறு எதாவது மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று சொன்னால் அதற்குரிய மருத்துவரின் ஒப்புதலை அவர்கள் சமர்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மேலும் டிசம்பர் 3ஆம் தேதி வரை கூகுள் ஊழியர்களுக்கு கெடு விதித்திருந்த நிலையில் தற்போது ஜனவரி 13ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கூகுள் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.