281
இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 11 ஆவது போட்டியில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார், பந்துவீச்சில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி சார்பாக வண்டர்சே மற்றும் ராம்பொல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனை அடுத்து 139 என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.