ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்காட்லாந்தில் கிறிஸ்மஸ் விழாக்களை இரத்து செய்யுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓமிக்ரானால் ஏற்படும் பல தொற்றுப் பரவல், கிறிஸ்மஸ் விருந்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஸ்கொட்லாந்து தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொது சுகாதார அறிவியல் இயக்குனர் டாக்டர் நிக் ஃபின் இதுகுறித்து கூறுகையில், ‘ திட்டங்களை ஒத்திவைப்பது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
நீங்கள் தடுப்பூசியைப் பெறுவது, உங்கள் பூஸ்டரைப் பெறுவது, நீங்கள் முகக்கவசங்கள் உபயோகிப்பது, உங்களால் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வது பாதுகாப்பானது’ என கூறினார்.
ஸ்கொட்லாந்தில் ஓமிக்ரோன் தொற்றுகள் வேகமாக உயரும் என்று தான் எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் இந்த வார தொடக்கத்தில் கூறியிருந்தார்.
புதிய மாறுபாட்டின் ஒரு தொற்று நேற்று (வியாழக்கிழமை) பதிவு செய்யப்பட்டது. சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி மொத்தம் 109ஆக உள்ளது. இருப்பினும் தொற்றுகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஸ்கொட்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 கொரோனா வைரஸ் இறப்புகளும் 3,196 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன.