‘உரக்க சொல்’ என்ற பெயருடன் பிரியங்கா அணியினர் பேசினர். பின்னர் “வெற்றிக்கொடி கட்டு” என்ற டாஸ்க் வழங்கப்பட்டது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் இதுவரை 8 பேர் வெளியேறியுள்ளனர். கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 9 வாரங்களை நிறைவு செய்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
நேற்றைய நிகழ்ச்சி பாவ்னி – அக்ஷ்ரா சண்டையுடன் தொடங்கியது. பாவ்னி தனது நாணயத்தின் பவரை பயன்படுத்தி இந்த வர தலைவராகி உள்ளார். எனவே வீட்டில் உள்ள மூன்று பெண்களின் உதவியாளராக பாவ்னி இருப்பார் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். ஆனால் அக்ஷராவோ தனது சமையல் பணிகளில் உதவி கேட்டதால் பாவ்னி கடுப்பானார். உங்களது தனிப்பட்ட வேலையில் உதவி வேண்டும் என்றால் கேளுங்கள் செய்கிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. டாஸ்க் புத்தகத்தை வாசித்த ராஜு, இந்த வீடு இதுவரை எவ்வளவோ பிரச்சனைகளை பார்த்திருகிறது. பிரச்னையை பிரச்சாரமாக மாற்றி பார்த்திருக்கிறதா? உங்கள் பலவீனங்களை பலமாக மாற்ற தயார் ஆகுங்கள், ஏனென்றால் இன்றுமுதல் இந்த பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாற போகிறது. ஹவுஸ் மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்க வேண்டும் என விளக்கினார்.
இந்த டாஸ்கில் ராஜு, தாமரை, நிரூப் , சிபி ஒரு அணியாகவும் சஞ்சீவ், இமான், வருண், அக்ஷ்ரா ஒரு அணியாகவும், அபினய், பிரியங்கா, அமீர், பாவ்னி ஒரு அணியாகவும் பிரிந்தனர். மேலும் அரசியல்வாதிகள் போல ஆண்கள் வெள்ளை சட்டை, வேஷ்டியிலும், பெண்கள் அனைவரும் சேலை அணிந்தும் இருந்தனர். பின்னர் முதலில் வந்த தலைவர் சிபி, தங்கள் கட்சி பெயர் பிக்பாஸ் மக்கள் முன்னேற்றக் கழகம்’ BBMK’ என்றும் கொள்ளகை பரப்பு செயலாளர் ராஜூ, மகளிர் அணித் தலைவர் தாமரை, வியூக அமைப்பாளர் நிரூப் என்று பட்டியலிட்டார். மேலும் ‘நீதி, நேர்மை, நியாயம்’ என்பதுதான் கட்சியின் கொள்கை என்று கூறினார். இதனை தொடர்ந்து வந்த சஞ்சீவ், “எங்கள் கட்சியின் பெயர் NPP” என்றும், கட்சியின் சின்னம் நெற்றிக்கண்” என்றும் பேசினார்.
‘உரக்க சொல்’ என்ற பெயருடன் பிரியங்கா அணியினர் பேசினர். பின்னர் “வெற்றிக்கொடி கட்டு” என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் கார்டன் ஏரியாவில் கொடிகள் நடுவதற்கு இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தது. எந்த இரண்டு நபர்கள் தங்கள் கட்சிக்கான இரண்டு கொடிகளை நடுகிறார்களோ அவர்களது அணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இறுதியில் எந்த அணி அதிக மதிப்பெண்கள் வாங்குகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும் என கூறப்பட்டது.
இந்த டாஸ்கின் இறுதி சுற்றில் தாமரை, பாவனி, இமான் ஆகிய மூவரும் மோதிய ஒரு ஆட்டத்தில் பாவனி சாமர்த்தியமாக ஒரு கொடிக்கம்பத்தைப் பற்றி விட, இன்னொரு கம்பத்தை தாமரை எடுத்து கொண்டார். ஆனால் அவரின் கொடி கீழே விழுந்து விட்டதால் அதை எடுக்க போகும் நேரத்தில் இமான் வலுக்கட்டாயமாக தாமரையுடன் மல்லுக்கட்டி கம்பத்தை பிடுங்கி தனது கொடியை நட்டு வைத்தார். இதனால் இமான் அணி வெற்றி பெற்றது. ஆனால் இமான் இப்படி செய்ததால் கடுப்பான தாமரை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நேற்று நடந்த இந்த டாஸ்கில் சிபி, சஞ்சீவ் அணியினர் 6 மதிப்பெண்களும், பிரியங்கா அணியினர் 4 மதிப்பெண்களும் எடுத்திருந்தனர்.
இந்தநிலையில் இன்றும் இந்த டாஸ்க் தொடர்வது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், “வெற்றிக்கொடி கட்டு” டாஸ்க்கின் இரண்டாவது சுற்று நடைபெறுகிறது. இதில் 20 கொடிகள் கொடுக்கப்படும், தனித்தனியாக தங்களது அணியின் கொடியை நட்டு தங்கள் கட்சியின் ஆதிக்கத்தை காட்ட வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதில் அபினய் – தாமரை இடையே பிரச்னை நடக்கிறது. இருவரும் சண்டை போடும் நிலையில், அமீர், அபினய்யை சமாதானப்படுத்தி அழைத்து செல்லும் காட்சிகள் உள்ளது. மேலும் தாமரை கோபமாக பேசும் காட்சிகளும் உள்ளது. இதனால் இன்று தாமரை – அபினய் அணியினர் இடையே மோதல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Day66 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/vgzuuQNBi4
— Vijay Television (@vijaytelevision) December 8, 2021