இந்தியா மற்றும் நியூசிலாந்து (indvsnz) அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று (03.12.2021)-ம் தேதி தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று நியூசிலாந்து இடது கை சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் (AjazPatel) பந்துவீச்சை தாக்கு முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 325 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இந்தப் போட்டியில் மும்பையை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
மேலும், கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் இந்திய வீரர்கள் 10 பேரின் விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அஜாஸ் படேல் பெற்றார்.
இதற்கு முன்பு இச்சாதனையை, இங்கிலாந்து அணியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லெகர் 53 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்காக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தார்.
அதன்பின்னர், 1999-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே 76 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்கள்.
10 wickets in an innings
well done Ajaz Patel#AjazPatel pic.twitter.com/XTVmTi6btk— Captain Jack Sparrow (@Captainjack567) December 4, 2021