Omicron வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உருவெடுத்த Omicron வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, மிக அதிகமாக பரவும் தன்மை கொண்டதால் அரசுகள் மிகுந்த கவனமெடுத்து வருகின்றன.
இந்நிலையில் Omicron வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மாநிலங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளை விமான நிலையங்களிலேயே பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.