தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்களுக்கான தேர்வுகளில் கட்டாய தமிழ்மொழி தகுதி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதாவது, தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்துக்காக நடத்தப்படும் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும்.
தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டி தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் I, II, II-ஏ ஆகிய இரு நிலைகளை கொண்ட தேர்வுகளை தமிழ் மொழித் தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடத்தப்படும்.
குரூப் III, IV ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கில தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக இருக்கும்.
இதன்படி தமிழ் தெரிந்தால் மட்டுமே அரசு வேலை கிடைக்கும் என்ற நிலை உருவாகும், தமிழர்களுக்கு மட்டுமெ 100 சதவிகிதம் அரசு வேலையும் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.