கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தொழில்துறை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஒருநாள் எதிரொலியாக அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலையும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ. 4538- க்கு விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ரூ.36304-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை 40 பைசா உயர்ந்து ரூ 67.60-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 67,600க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து கிராம் ஒன்று ரூ.4,515க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து , ரூ. 36,120-க்கு விற்பனையாகிறது.